பிரித்தானியாவின் இளவயது ‘தாத்தா’வாகப்போகும் இளைஞன்: 14 வயதில் தந்தையானவரின் 13 வயது மகள் கர்ப்பம்

Read Time:2 Minute, 54 Second

pregenent-00127 வயதான இளைஞர் ஒருவர் பிரித்தானியாவின் ‘இள வயது தாத்தா’வாக மாறவுள்ளதாக நேற்று முன்தினம் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

14 வயதில் தந்தையான பிரித்தானியர் ஒருவரின் 13 வயதான மகள் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் தற்போது 27 வயதை அடைந்துள்ள குறித்த இளைஞர் பிரித்தானியாவின் ‘இள வயது தாத்தா’ என்ற பெயரைப் பெறவுள்ளார்.

ஆனால் இவர்களது பெயர் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. குறித்த 13 வயதான சிறுமி, தான் 5 மாத கர்ப்பிணியாகவுள்ளதாக ஸ்கேன் படத்தினை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். பேஸ்புக்கில் பலரும் சிறுமிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இளவயது தாத்தாவாக இடம்பெறப்போகும் 27 வயதான சிறுமியின் இளம் தந்தை தற்போது கொலைக்குற்றச்சாட்டில் சிறையிலுள்ளார்.

கொள்ளை ஒன்றை தடுக்க முற்பட்ட வேளையில் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், இளைஞனின் கத்தி தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இதன்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

தானும் 14 வயதில் தந்தையாகியதால் எதிர்நோக்கிய பிரச்சினைகளை தற்போது தனது மகளும் எதிர்நோக்கவுள்ளார் என்பதால் கர்ப்பத்தை கலைக்க மகளிடம் கேட்டுள்ளார் தந்தை.

ஆனால் தனது மகள் குழந்தையை பெற்றெடுக்க தீர்மானிக்க அவரை வற்புறுத்த விரும்பவில்லை தந்தை.

இளம் தாத்தாவின் மனைவி (28 வயது) தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளன. இவர்களுடேன இச்சிறுமி வாழக்கின்றார்.

‘பிரித்தானியாவின் இளவயது தத்தாவாக இருப்பதனை வெகுவாக விரும்புகிறேன். இளவயதில் தாத்தா, பாட்டியாக இருப்பதால் பல அனுகூலங்கள் உண்டு. வயதானவர்கள் செய்ய முடியாதவற்றை செய்ய முடியும்’ எனவும் 27 வயதான இளவயது தாத்தா தெரிவித்துள்ளார்.

2011இல்29 வயதில் தாத்தாவான ஷெம் டேவீஸ் என்ற நபரே பிரித்தானியாவின் இளம் தாத்தா என்ற பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) உயிருக்காக போராடிய தந்தைக்காக, 11 வயது மகளுக்கு விநோத திருமணச்சடங்கு
Next post பேஸ்புக்’ சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையான அதிபர், மீண்டும் விளக்கமறியலில்..