விபூசிகா தொடர்ந்தும் சிறுவர் இல்லத்தில் இருக்க நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவினை (13) தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி வி.முத்துக்குமாருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடைய உடமைகளை எடுத்துக் கொள்வதற்கு மாவட்ட நன்னடத்தை அதிகாரிக்கும் பொலிஸாருக்கும் நீதவான் அனுமதியளித்தார்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்து யுத்தக்காலத்தில் காணாமற்போனதாக கூறப்படும் இளைஞர் ஒருவரின் தாயும் சகோதரியும் கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரும், கடந்த 14ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, பாலேந்திரன் ஜெயக்குமாரி (வயது 50) 3 மாதகாலம் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அத்துடன் மகள் விபூசிகா வைத்தியச் சான்றிதழ் பெறுவதற்காக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மருத்துவச் சான்றிதழ் பெற்று சிறுமியினை கடந்த 17 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஆஜர்ப்படுத்தினார்.
இதன்போது நீதவான் சிறுமியினை நேற்று வரை கிளிநொச்சியிலுள்ள சைவச் சிறுவர் இல்லமான மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்து பராமரிக்கும்படி சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மேற்படி சிறுமி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மீண்டும் நேற்று திங்கட்கிழமை (31) ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating