பாலியல் வல்லுறவு &கொலை: நான் கொலையாளி அல்ல, உயிர்களை காப்பவன்: வைத்தியர் சாட்சியம்
நான் கொலைக்காரன் அல்ல. மக்களின் உயிர்களை காப்பாற்றும் வைத்தியன். நிரபராதியான என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களால் என் வாழ்க்கை நாசமாகியுள்ளது என்று நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ சாட்சியமளித்துள்ளார்.
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதன் பின்னர் அந்த யுவதியை ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எ. கபூர் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
12-11-2007அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்த சமிளா திசாநாயக்க (23 வயது) என்ற யுவதியே மரணமடைந்தார்.
சந்தேகநபரான வைத்தியர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
நான் மதுரனகடவல பிரதேசத்தைச் சேர்ந்தவன். எனது தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். எனது தந்தை ஓய்வு பெற்ற சாரதியாவார்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தயடைந்ததையடுத்து எனக்கு கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் அனுமதி கிடைத்து. அங்கு கல்வியை தொடர்ந்தேன்.
ராகமை வைத்திய பீடத்தில் மருத்துவ பட்டப்படிப்பை பூரத்தி செய்தேன். 23-10-2006 ஆம் ஆண்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக நியமனம் பெற்றேன்.
அந்த வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் உள்ள அறையொன்றில் எனது மனைவியுடன் தங்கியிருந்தேன். எனது மனைவி ஒரு தாதியாவார்.
அவர் ராகமை வைத்தியசாலையில பணியாற்றி வந்தார். எனது அறைக்கு பக்கத்தில் தொலைபேசி இயக்குனர் ஒருவரின் அறை இருந்தது.
வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உதவி எனக்கு கிடைத்தது. ஆரம்ப வைத்திய பிரிவில் கடமையாற்றிய போது சிற்றூழியர்களின் பணிகள் தொடர்பில் அவர்களுக்கு பலமுறை எச்சரித்திருக்கிறேன்.
8-11-2007 அன்று மனைவியுடன் எனது ஊருக்குச் சென்றேன். மீண்டு:ம் 11-11-2007 அன்று மாலை 6 மணிக்கு வைத்தியசாலையில் உள்ள எனது அறைக்கு வந்தேன்.
எனது ஊரில் எனக்கு மதிப்பு இருந்தது. ஊரில் உள்ள பெரியவர்கள் என்னை காண்பித்து என்னை முன்னுதாரணமாக காட்டி ஊரிலுள்ள இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவார்கள்.
நான் பணியாற்றும் சத்திர சிகிச்சைப் பிரிவு வைத்தியசாலையின் முதலாவது மாடியில் உள்ளது. சம்பவம் இடம்பெற்ற அன்று காலை 8 மணிக்கு நான் வெளிநோயாளர் பிரிவிற்கு சென்றேன்.
எனது மனைவி சுகயீனம் காரணமாக தொழிலுக்கு செல்லாமல் அறையில் இருந்தார். விடுமுறை தொடர்பில் மனைவி ராகமை வைத்தியசாலைக்கு அறிவித்திருந்தார்.
என்னோடு பணியாற்றும் வைத்தியர் இந்திக காலை 9.30 க்கு வந்தார். ஆறாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு அதன் பின்னர் சென்றேன். அறையில இருந்த எனது மனைவி கோப்பி ஒன்றை தயாரித்து தரவா என கேட்டார்.
வேண்டாம் என்றேன். 10.30 மணியளவில் மீண்டும் வெளிநோயாளர் பிரிவிற்கு சென்று வைத்தியர் தம்மிக்கவுக்கு உதவிபுரிந்தேன்.
பகல் சாப்பாட்டிற்காக சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றேன். எனக்கும் மனைவிக்கும் சிற்றுண்டிகளையும் யோகட் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றேன்.
மனைவி அங்கு இருக்கவில்லை. நான் தொலைபேசி அழைப்பினை எடுத்து அவரிடம் விசாரத்த போது வங்கிக்கு சென்றுள்ளதாகவும்; அத்துடன் எனது மேற்படிப்பு தொடர்பான ஆவணங்களை தயார்படுத்துவதற்காக நரகருக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
விரைவில் அறைக்கு வருவதாகவும் கூறினார்.
2.30 மணியளவலி;ல் சத்திர சிகிச்;சை பிரிவிற்குச் சென்றேன். அங்கு தலையில் காயமடைந்த நிலையில் பெண் ஒருவரை கொழும்புக்கு கொண்டு சென்றதாக அறிந்தேன். நான் சத்திர சிகிச்;சை பிரிவில் இருந்த போது மனைவி என்னை தொலைபேசியில் அழைத்தார்.
நான் அவரை அழைத்து அறை சாவியை அவரிடம் கொடுத்தேன். மீண்டும் 3.30 மணியளவில் நான் அறைக்குச் சென்றேன்.
16-11-2007 அன்று வைத்தியர் தம்மிக்க பொலன்னருவைக்கு மாற்றலாகிச் செல்ல இருந்தார். அவருக்கு ஞாபகச் சின்னம் ஒன்றை வழங்குவதற்காக அதனை வாங்க நகருக்கு சென்றேன்.
மீண்டும் அறைக்கு திரும்பினேன். அறையின் அருகில் பொலிஸார் நின்றனர். பெண் ஒருவர் நிலத்தில் விழுந்து இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனது அறையை சோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். நான் இது தொட்பில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்ரி திசேராவுக்கு அறிவித்தேன். அவர் பொலிஸாரின விசாரணைக்கு உதவுமாறு கூறினார்.
பொலிஸார் அறையை சோதனை செய்தனர். என்னை வைத்தியசாலையின் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினர். பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்வதாக அங்கு வைத்து கூறினர்.
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லலை. சகலரதும் முன்னிலையில் நான் பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டேன்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைகள் இரண்டையும் கட்டி தாக்கினர். உண்மையை சொல்லாவிட்டால் கடலுக்கு கொண்டு சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதாக அச்சுறுத்தினர்.
நான்கு மணிவரை விசாரiணை செய்தனர். 5 மணியளவில் சிறைக் கூண்டில் அடைத்தனர்.
அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தினர். வைத்தியசாலையின் சிற்றூழியர் பியற்றிஸ் என்பவர் சாட்சியமளித்தார். அவரை தெரியும் என்பதால் நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
நான் ஒருபோதும் யாரையும் கொலை செய்ததில்லை. செய்யாத குற்றத்திற்காக குற்றச்சாட்டப்;பட்டுள்ளேன். நான் மக்களின் உயிரை காப்பற்றுபவன். எனது வாழ்க்கை வீணாவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.
சந்தேக நபரின் விளக்கமறியலை நீடித்த நீதவான் இந்த வழக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Average Rating