“கேரள நாட்டிளம் பெண்களுடனே” செக்ஸ் படமா?: டைரக்டர் குமரன் ஆவேசம்
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ செக்ஸ் படம் என்று சிலர் வதந்தி பரப்புவதாக அப்படத்தின் டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் ஆவேசப்பட்டார். இந்த படம் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற தலைப்பை பார்த்த சிலர் இது ஆபாச படம் என இணையதளங்களில் செய்தி பரப்பி உள்ளனர். இதுகுறித்து டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ குடும்பபாங்கான காமெடி படம். பெண்களும் குழந்தைகளும் படத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். ஆனால் இந்த தலைப்பை பார்த்து ஏதோ நான் ஆபாச படத்தை எடுத்து வெளியிட்டு இருப்பதாக சிலர் புரளி கிளப்பி விட்டுள்ளனர்.
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்பது பாரதியார் பாடலில் உள்ள வரி. அதை ஆபாசமாக திரித்து சொல்வது கண்டிக்கத்தக்கது. மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க ஒரு கும்பல் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறது. இது அதுமாதிரி படம் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டி யு சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
இந்த படத்தை சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் திரையிட மறுத்தனர். தலைப்பு ஆபாசமாக உள்ளது என்று அந்த தியேட்டரின் மானேஜர் கூறினார்.
இந்த படத்தில் பாடல்கள் எழுதி உள்ள கவிஞர் வைரமுத்து மானேஜருக்கு போன் செய்து அது நல்ல படம். உங்க தியேட்டருக்கு இழுக்கு வராது என்று உறுதி அளித்த பிறகு படத்தை திரையிட சம்மதித்தனர்.
கமர்ஷியல் ஆன நல்ல பொழுதுபோக்கு படம் என்று விநியோகஸ்தர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் சிலர் திட்டமிட்டு படத்துக்கு எதிராக வதந்தி பரப்புகின்றனர். இதையும் மீறி படம் ஹிட்டாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating