திமுக மீது வழக்கு தொடருவேன்: மு.க.அழகிரி

Read Time:4 Minute, 59 Second

ind.alagiriதன்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், இது குறித்து விளக்கம் கேட்டு கட்சியில் இருந்து நோட்டீஸ் எதுவும் அனுப்பப் படவில்லை என்றும் இதனால், கட்சியின் பொதுச் செயலர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மு.க.அழகிரி தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இன்று காலை, திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாலை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.

ஆலோசனைக்குப் பின்னர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது…

ஏதோ ஒரு காரணத்தைக் கூறி என்னை நீக்கியுள்ளனர். இது திமுக தலைவரால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, நிர்பந்தத்தின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரை மிரட்டிய நம் நண்பர் யார்? மிரட்டலுக்கு உதவியாக இருந்தவர் யார்? என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த விவரத்தை நீங்கள் போகப் போக தெரிந்து கொள்வீர்கள்,.

கடந்த ஜனவரி மாதம் என்னை கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கினார்கள். கட்சியில் இருந்து ஒருவரை சஸ்பெண்ட் செய்தால், அதற்கு உரிய நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எனக்கு இதுவரை எந்த விதமான நோட்டீஸும் வரவில்லை. இப்படியிருக்க, என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதே ஆதரவாளர்கள் கூட்டத்தில் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன் என்றேன். ஒரு தந்தையிடம் மகன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு உள்ளது என்றும் கூறினேன்.

மதுரை மாநகர திமுக கலைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்றுதான் கேட்டேன். தவிர எனக்கு மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலர் பதவி கொடுங்கள் என்று கேட்கவில்லை. நான் நியாயத்துக்காக போராடினேன். உண்மையாக உழைப்பவர்களுக்காகத்தான் போராடினேன். ஆனால்,என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் நீக்காவிடாலும் நானும் என்னைச் சுற்றியிருப்பவர்களும் என்றுமே திமுககாரர்கள்தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

அறிவாலயம் எங்கள் சொத்து. எங்கள் உழைப்பால் கட்டப்பட்டதுதான் அறிவாலயம்.

கட்சியில் இருந்து நீக்கி விடுவதால் யாரும் எங்களை வெளியே போ என்று சொல்ல முடியாது. நான் கட்சியில் இருந்த முறைகேடுகள் குறித்து குற்றம் சாட்டியிருந்தேன். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் இல்லை.

ஆகவே என்னை நீக்கியதற்கான காரணம் கூறாமல், நீக்கியதற்கு பொதுச் செயலர் மீது வழக்கு தொடருவேன்.

இப்போது இருப்பவர்கள் தேர்தலுக்கு பிறகு யாரும் அங்கு இருக்க மாட்டார்கள் என்றார் அழகிரி.

அப்போது செய்தியாளர்கள், தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சியினரும் உங்களை வந்து சந்திப்பது, கட்சிக்கு ஒரு பலவீனத்தை ஏற்படுத்தாதா என்று கேட்டனர். அதற்கு, வீட்டுக்கு வருபவர்களை வரவேண்டாம் என்றா சொல்ல முடியும் என்று பதில் கேள்வி கேட்டார்.

திமுகவில் இருந்தபோது உங்களிடம் ஆதரவு கேட்டு வந்தார்களே என்று கேட்டபோது,

நான் யாருக்கும் ஆதரவு தருவதாக சொல்லவில்லையே என்றார்.

தேர்தல் நேரத்தில் உங்கள் நடவடிக்கைகள் கட்சிக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்தியதால்தான் இந்த நடவடிக்கையா என்று கேட்டதற்கு,

வேறு ஏதோ ஒரு காரணத்தால்தான் என்னை நீக்கியுள்ளனர் என்று கூறினார் அழகிரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை காப்பாற்றி, உயிரிழந்த இளைஞன்
Next post தேடப்படுவோருடன் தொடர்பு வைக்க வேண்டாமென, முன்னாள் போராளிகளுக்கு எச்சரிக்கை