இலங்கை பெண் ஒருவருக்கு, சவுதியில் 1200 கசையடிகள் தீர்ப்பளிப்பு

Read Time:1 Minute, 27 Second

saudivசவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 1200 கசையடிகள் விதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை விடுதலை செய்து தருமாறு அதிகாரிகளிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கசையடிக்கு மேலதிகமாக 12 வருடகால சிறைத்தண்டனையும் அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவரான சந்ரசிறி வீரசேகர என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம், நிக்கவெரட்டிய, விட்டிகுழிய, வதுவெஸ்ஸ பகுதியை சேர்ந்த இலங்கைப் பெண் ஒருவருக்கே சவுதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஜித்தாவிலுள்ள மலாஸ் சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் 2006 ஆம் ஆண்டு மே மாதம் வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார்.

பணியாற்றிய வீட்டில் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சில வருடங்களுக்கு முன்னர் இந்த பெண், சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 வயதுடைய மகன், மகள் கொடுமை: 44 வயது தந்தை கைது
Next post சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது -மன்னார் ஆயர்