பாகிஸ்தானில் அடிமையான குரங்கை ஒரு இலட்சம் ரூபா கொடுத்து மீட்ட சவூதி நபர்

Read Time:2 Minute, 0 Second

4786Monபாகிஸ்தானில் அடிமைப்பட்டிருந்த குரங்கொன்றை அதன் உரிமையாளருக்கு சவூதி அரேபிய நபரொருவர் 3 ஆயிரம் சவூதி ரியால்களைக் (சுமார் ஒரு இலட்சம் ரூபா) கொடுத்து மீட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

50 வயதுகளையுடைய பெயர் வெளியிடப்படாத நபரொருவரே குரங்கை மீட்டுள்ளார். குறித்த நபர் கராச்சி வைத்தியசாலை ஒன்றில் முதுகில் சத்திரசிகிச்சை ஒன்று செய்துகொண்டுள்ளார். வெற்றிகரமாக அமைந்த இச்சத்திரகிகிச்சையின் பின்னர் ஒருவருக்கு உதவ ஆசைப்பட்டுள்ளார் இவர்.

இந்நிலையில் வீதியில் செல்லும்போது மக்களுக்கு வேடிக்கை காட்டி பணம் சம்பாதிப்பதற்காக பாகிஸ்தான் நபரொருவர் குரங்கொன்றினை கயிறு மற்றும் சங்கிலி மூலம் கட்டாயப்படுத்திக்கொண்டிருந்துள்ளார்.

அக்குரங்கை மீட்க குரங்கின் உரிமையாளருடன் பேசியுள்ளார். மாமொன்றுக்கு குரங்கினால் 550 ரி;யால் கிடைப்பதாகக் கூறி குரங்கை கொடுக்க மறுத்துள்ளார் அதன் உரிமையாளர். பின்னர் சவூதி நபர் 3,000 ரியால்கள் வழங்க முன்வந்ததும் உடனடியாக விற்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சவூதி நபர் தான் வாங்கிய குரங்கை பாகிஸ்தான் நண்பர் ஒருவரின் துணையுடன் பாகிஸ்தான் மிருகக்காட்சிச்சாலை ஒன்றுக்கு பரிசாகக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, 2 மாணவிகள் தற்கொலை!
Next post ஜேர்மனியில் மனைவியை கொன்று புதைத்த, கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை