மலேசிய விமானம் மாயமான பிராந்தியத்தில் 6 விமானங்கள் காணாமல் போயுள்ளன…
மலேசிய விமானம் மாயமான பிராந்தியத்தில் ஏற்கனவே 6 விமானங்கள் காணாமல் போயுள்ளன மலேசிய விமானம் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்ற நிலையில் இந்த விமானம் மாயமான பிராந்தியத்தில் இதற்கு முன்னர் 6 விமானங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனி விமானி பயணிக்கும் விமானத்தில் இருந்து பயணிகள் விமானம் வரை இந்த பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு காணாமல்போன விமானங்களின் தகவல்கள் வருமாறு…
பான் மலேசியன் ஏயார் ரான்ஸ்போட் – 1993 பான் மலேசியன் ஏயார் ரான்ஸ்போட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 1993ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி வடக்கு சுமாத்திரா பகுதியில் காணாமல் போயுள்ளது.
இந்தோனேசியாவின் இரண்டு உள்ளூர் விமான நிலையங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட போது இந்த விமானம் 14 பேருடன் காணாமல் போயுள்ளது.
உப்பாலி ஏயார் விமானம் – 1983 இலங்கையின் முன்னணி தொழிலதிபர் உப்பாலி விஜேவர்தன உள்ளிட்ட 6 போர் பயணித்த விமானம் ஒன்று 1983ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குறித்த பகுதியில் காணாமல் போனது மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பயணித்த நிலையில் இந்த விமானம் மாயமானது.
கரூடா இந்தோனோசியா ஏயார்லைன்ஸ் – 1961 பெப்ரவரி 3ஆம் திகதி 5 சிப்பந்திகள் மற்றும் 21 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று இந்தோனேசியாவின் மதுரா தீவுகளுக்கு அப்பால் தெடர்பு அற்று போனது. இந்தோனேசியாவின் இரண்டு உள்ளூர் விமான நிலையங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட போது இந்த விமானம் காணாமல் போயுள்ளது.
வானிலை ஆய்வு விமானம் – 1974 சூறாவளி தொடர்பான தகவல்களை ஆய்வு செய்யும் விமானம் ஒன்று தென் சீன கடற்பரப்பில் 1974ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளது 4 நாட்களாக தொடர்ந்த தேடுதலின் பின்னரும் விமானத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை. விமான பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் இதன் போது காணாமல்போயினர்.
சார்ள்ஸ் கிங்ஸ்வூட் ஸ்மித் – 1935 சார்ள்ஸ் கிங்ஸ்வூட் ஸ்மித் எனப்படும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த விமானி அவுஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் அதிகுறைந்த நேரத்தில் பயணித்து சாதனை புரிய வேண்டும் என திடசங்கற்பம் பூண்டிருந்தார். இந்த முயற்சியில் அவர் ஈடுபடும் போது அவர் பயணித்த விமானத்துடன் அவரும் காணாமல்போனதுடன் அந்த மர்மம் இன்னும் நீடிக்கின்றது.
1935 நவம்பர் 8ஆம் திகதி அவர் பயணித்த விமானத்தினுடனான தொடர்பு தற்போது மலேசிய விமானம் காணாமல்போன பிராந்தியத்தில் இழக்கப்பட்டது. ஜீ.டபிள்யூ சோல்ட் மற்றும் எப்.பி.டெயிலர் பயணித்த விமானம் – 1932 ஜீ.டபிள்யூ சோல்ட் மற்றும் எப்.பி.டெயிலர் ஆகிய இரண்டு தொழிலதிபர்கள் பயணித்த விமானமும் 1932ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி காணாமல் போயுள்ளது. அவர்கள் பயணித்த சிறிய விமானமான பு-யுயுமுயு, கடல் பகுதியில் வெடித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
Average Rating