ஆணுறுப்புக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா காப்புறுதி

Read Time:1 Minute, 54 Second

Questionகனேடிய மொன்றியல் நகரைச் சேர்ந்த உள் ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் கம்பனியொன்று தனது ஆண் வாடிக்கையாளர்களுக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா (50 ஆயிரம் டொலர்) பெறுமதியான பிறப்புறுப்பு காப்புறுதியை வழங்குவதாக விநோத அறிவிப்பு செய்துள்ளது.

நாளை மறுதினம் 15ஆம் திகதி முதல் மேற்படி யு.என்.டி. இஸட் கம்பனியின் இணையத்தளத்தினூடாக அந்த கம்பனியால் உற்பத்தி செய்யப்படும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளாடைகளை கொள்வனவு செய்யும் ஆண்களுக்கு லலொய்ட்ஸ் ஒப் லண்டன் காப்புறுதி நிறுவனத்தின் காப்புறுதியை வழங்கப்படும் என மேற்படி கம்பனி தெரிவிக்கின்றது.

ஆணொருவர் தனது பிறப்புறுப்பை இழக்க நேரிடும் போது அவருக்கு காப்புறுதி பணம் வழங்கப்படும் என அந்தக் கம்பனி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி கம்பனியின் ஸ்தாபகரான பெர்னார்ட் டோர் விபரிக்கையில் ஆண்கள் தமது ஆயுள், நிலம், வீடு, கார், நாய் அனைத்தையுமே காப்புறுதி செய்யமுடிகின்ற போது அவர்களது பிறப்புறுப்பை காப்புறுதி செய்வதில் என்ன தவறு இருக்கின்றது என கூறினார்.

ஆண்டு தோறும் 16,000 ஆண்கள் பிறப்புறுப்பில் காயங்களுக்கோ அல்லது பிறப்புறுப்பு துண்டிக்கப்படும் நிலைக்கோ உள்ளாவதாக அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 நாட்களை நிறைவு செய்துள்ள கோலி சோடா
Next post நஸ்ரியாவின் குட்டை, அம்பலப்படுத்திய படக்குழுவினர்..