யாழ் கிரிக்கெட் போட்டியில் இளைஞன் அடித்துக் கொலை!!

Read Time:3 Minute, 24 Second

dead-bodyயாழில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றது.

50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.

மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும், மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்கவில்லை எனவும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேசமயம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான ´வடக்கின் பெருஞ் சமர்´´ என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி, யாழ். புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 ஆவது துடுப்பாட்ட போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்தக் கசிவு ஏற்படும் 600 வருடங்கள் பழைமையான அதிசய மரம்..
Next post பிள்ளைகள் கவனிக்கவில்லையென, மனம் வருந்தி விசம் அருந்திய பெற்றோர்