மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த, முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் மரணம்..

Read Time:2 Minute, 21 Second

arumai-aமட்டக்களப்பில் இன்று காலை அமெரிக்காவுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அருமைலிங்கம் இன்று பிற்பகல் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குருக்கள்மடத்தைச்தைச்சேர்ந்த இவர்ஆரம்பகால ரெலோ உறுப்பினரான இவர் பின்னர் ஈ.பி ஆர்.எல் பில் இணைந்து வடகிழக்கு மாகாண சபையில் மூன்று மாதங்கள் உறுப்பினராக அங்கத்தும் வகித்த இவர் 1994இல் ஈ.பி.டி.பியில் இணைந்தார்.

அதன் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகில் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை 8.30மணி தொடக்கம் பிற்பகல் 12.00மணி வரை இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீடுசென்றுவிட்டு உரையாடிக்கொண்டிருந்தபோது திடிரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை தேசிய சேவையில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஈ.பி.டி.பியின் இதயவீணை நிகழ்வில் போடியாராக குரல் கொடுத்து வந்து பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரெஞ்சுகாரரின் போட்டோவை, காப்பி அடிக்கவில்லை: கமல்
Next post (PHOTOS) யோகாசனத்தில் கலக்கும் தாயும், மகளும்..