மலேசிய ஏர்லைன்ஸ் மாயம்: தலைமை பைலட் வீட்டில் போலீசார் சோதனை

Read Time:3 Minute, 29 Second

003dமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது.

விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என நம்பப்படுகிறது. மாயமான விமானத்தை சீனா, அமெரிக்கா, மலேசியா நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது.

இந்த தகவல் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை, விமான தேடல் குழு, மீட்பு குழு ஆராய்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதி வரையில் விமானத்தை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரலாறு காணாதவகையில் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 10 செயற்கைக்கோள்களை சீனா தேடும் பணியில் தீவிரபடுத்தப்பட்டது.

சீன அரசு இணையதளம் ஒன்று காணாமல் போன மலேசிய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் தென்படும் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில் கடந்த மார்ச் 9ம் தேதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் ‘மூன்று சந்தேகத்திற்குரிய மிதக்கும் பொருட்கள்’ மாறுபட்ட அளவுகளில் தென்பட்டுள்ளன. காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் விமானத்தின் பாகங்கள் அதிகபட்சம் 22-24 மீட்டருக்குள் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது.

விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜாகாரி அகமது ஷா வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

மலேசிய போலீசார் தலைமை பைலட்டின் குட்ம்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அகமது ஷா மன நிலை எவ்வாறு இருந்து என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இது ஒரு வாடிக்கையான விசாரணைதான் அவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்த வில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்கலைக்கழக கல்விச் செலவுக்காக, ஆபாச படங்களில் தோன்றிய மாணவி!
Next post அலுகோசு பதவிக்கு இரண்டு அவுஸ்திரேலியர்கள் விண்ணப்பம்..