(VIDEO) இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை, 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்..

Read Time:2 Minute, 42 Second

Rajini-kochரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன.

இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து பதிவு செய்தனர்.

கோச்சடையான் கார்ட்டூன் படம் என்ற வதந்தி ஏற்கனவே பரவி இருந்தது. டிரெய்லர் பார்த்தவர்கள் கார்ட்டூன் படம் அல்ல என்பதை உறுதி செய்தனர். 3 டி மோஷன் பிக்சர் தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர்.

டிரெய்லர், பாடல் மிவும் பிடித்து இருந்ததாக நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா, டைரக்டர் செல்வராகவன் போன்றோர் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர். அவர்களுக்கு படத்தின் டைரக்டர் சவுந்தர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் படம் ரூ.125 கோடி செலவில் தயா ராகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார். இதே தொழில் நுட்பத்தில் ஹாலிவுட்டில் வந்த அவதார் படத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவானது. படம் முடிய 5 ஆண்டுகள் ஆனது.

டின் டின் படத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவானது. 4 வருடத்தில் இந்த படத்தை முடித்தனர் என்றும் அவர் கூறினார்.

கோச்சடையான் நாயகி யாக தீபிகாபடுகோனே நடிக்கிறார். சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என கருதப்பட்டது.

ஆனால் தயாரிப்பாளர் முரளி மனோகர் தேர்தலுக்காக படத்தை நிறுத்தமாட்டோம். ஏப்ரலில் படம் வெளிவரும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி வேண்டாம்..
Next post உணவு திருட வந்த சிறுவனை, நடிகனாக்கிய இயக்குனர்