9 பேர் பயணிக்கக்கூடிய வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள்

Read Time:2 Minute, 35 Second

0059 பேரை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனமொன்றை தடுத்து நிறுத்திய ஆஸ்திரிய பொலிஸார் அதற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள் பயணம் செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

அந்த வாகனத்தில் 20 பெரியவர்களும் ஒரு வயது முதல் 9 வயதுடைய 22 சிறுவர்களும் இருந்துள்ளனர். 12 வயது வந்தவர்கள் 8 பேரும் ஆசனத்தில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் அமர்ந்திருந்ததுடன் ஏனையவர்கள் அந்த வாகனத்தின் பின்னாலிருந்த பொதிகளை வைக்கும் இடத்தில் திணிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

6 அடி நீளமும் 6 அடி அகலமுமுடைய மேற்படி பொதிகளை வைப்பதற்கான இடத்தில் பயணப்பொதிகள் பலவும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் இலக்கத் தகடுகளைக் கொண்ட அந்த வாகனம் ஜேர்மனியை ரெஜெஸ்ஸை பேர்க்கிற்கு செல்லும் வழியில் வியன்னாவுக்கும் சல்ஸ்பேர்க் இற்குமிடையிலுள்ள ஏ 1 நெடுஞ்சாலையில் ஆஸ்திரிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் பல வாகனங்களில் ஏற்றப்பட்டு சென்போல்டன் நகரிலுள்ள புகையிரத நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களை புகையிரத நிலைய பயணச்சீட்டுகளை பெற்று புகையிரதத்தில் பயணத்தை மேற்கொள்ள பணிக்கப்பட்டது.

அதே சமயம் மேற்படி குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் குறிப்பிட்ட வாகனத்திலேயே ஜேர்மனிக்கு பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அந்த சாரதி போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயக்குனர் – நடிகை மதுரீமா வெளிநாட்டில் மோதல்..
Next post தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபமா?; யுவன் பதற்றம்