வாழ்வா சாவா போராட்டம்: 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா இத்தாலி- செக் குடியரசுடன் நாளை மோதல

Read Time:3 Minute, 26 Second

W.Football.jpgஉலக கோப்பை கால்பந்து போட்டியின் `லீக்’ ஆட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. `டி’ பிரிவில் இன்று நடை பெறும் ஆட்டங்களில் ஈரான்-அங்கோலா, போர்ச்சுகல்- மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. `சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா -ஆலந்துடனும், ஐவரி கோஸ்ட்-செர்பியாவுடனும், பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை போட்டியின் 14-வது நாளான நாளை `இ’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றது. இதன் ஒரு ஆட்டத்தில் இத்தாலி-செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.இரு அணிகளுக்குமே நாளைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தாலி போட்டியை `டிரா’ செய்தாலே 2-வது சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால் செக்குடியரசு வெற்றிபெற் றால் மட்டுமே 2-வது சுற்றில் நுழைய வாய்ப்பு உள்ளது.

1934, 38 மற்றும் 1982-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி தனது முதல் ஆட்டத்தில் கானாவை தோற்கடித்திருந்தது. 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்து 4 புள்ளிகளுடன் உள்ளது. நாளைய ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா என்ற சூழ்நிலையில் உள்ளது.

புதிதாக களம் இறங்கிய செக் குடியரசின் ஆட்டம் சிறப் பாகவே உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட் டத்தில் கானாவிடம் 0-2 என அதிர்ச்சி தோல்வி அடைந்தது. செக் குடியரசு அணியில் முன் களமும், நடுகளமும் சிறப்பாக உள்ளது. இத்தாலி அணிக்கு எல்லா வகையிலும் அந்த அணி ஈடுகொடுத்து ஆடும். கேப்டன் கொல்லர் அணிக்கு பலமாக உள்ளார்.

ஒருவேளை இத்தாலி தோற்கும் பட்சத்தில் அந்த அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கானா-அமெரிக்கா இடையேயான வெற்றி, தோல்வியை பொறுத்தே அமையும். கானா-அமெரிக்கா போட்டியில் கானா வெற்றி பெறுகிற போது இத்தாலி போட்டியில் இருந்து வெளி யேற்றப்படும்.

கானா 6 புள்ளிகளுடன் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். மாறாக அமெரிக்கா வெற்றி பெற்றால் கானா அணி வெளியேறும். அப்போது இத்தாலியும் அமெரிக்காவும் தலா 4 புள்ளிகள் பெறும். அதனால் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் அணி அமெ ரிக்காவா, இத்தாலியா என்பது கோல்கள் அடிப்படையில் முடிவு செய்யப்படும். கானா- அமெரிக்கா ஆட்டம் இரவு நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதுவொரு கனடிய அரசின் விளம்பர அறிவித்தல்!
Next post நேபாளத்தில் விமான விபத்து : 9 பேர் பலி!