ஒரே மாதிரியான தோற்றத்துக்காக, பிளாஸ்திக் சத்திர சிகிச்சை செய்து கொண்ட சகோதரிகள்..
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டையர்களான இரு யுவதிகள் தாம் முற்றிலும் ஒரே தோற்றத்தை கொண்டவர்களாக மாறுவதற்காக ஏராளமான பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டுள்ளனர்.
இச்சத்திர சிகிச்சைக்காக இவர்கள் 2 லட்சம் டொரர்களை (சுமார் 2.6 கோடி ரூபா) செலவிட்டுள்ளனர். ஒரே தொழிலை செய்யும் இச்சகோதரிகள் இருவரும் ஒரே இளைஞரையே காதலிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரைச் சேர்ந்த அனா டிசின்க் மற்றும் லூசி டிசின்க் ஆகிய இருவரும் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள்.
இவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்கள் வளர வளர தமது தோற்றத்தில் ஏற்பட்ட சிறிய வித்தியாசங்களைக்கூட இவர்கள் விரும்பவில்லை.
இதனால் ஒரே மாதிரியான தோற்றத்தைப் பெறுவதற்காக பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொள்ள தீர்மானித்தனர்.
28 வயதான இவ்விரு யுவதிகளும் செயற்கையாக உதடுகள், மார்பங்களை பெரிதாக்கிக்கொண்டதுடன், கண் புருவங்களையும் டாட்டூ மூலம் மாற்றியமைத்தனர். இச்சத்திரசிகிச்சைகளுக்காக இவர்கள் 3 லட்சம் டொலர்களை செலவிட்டுள்ளனராம்.
இச்சகோதரிகள் பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்துகொள்வதற்கு முன்னர் அழகாக இருந்தார்கள் எனவும் இப்போது விகார தோற்றம் கொண்டர்வளாகியுள்ளனர் எனவும் பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் இவர்கள் அது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.
ஒரே தொழிலை செய்யும் இவ்விரு சகோதரிகளும் ஒரே கட்டிலில் உறங்குவது அசாதாரணமானதல்ல. ஆனால், இவர்கள் இருவரும் ஒரே இளைஞரையே காதலிப்பது பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.
பென் பெயர்ன் எனும் இளைஞரே இச்சகோதரிகளின் காதலர். இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளராக அவர் பணியாற்றுகிறார்.
இது குறித்து அனா கூறுகையில், ‘நாம் இருவரும் வாழ்க்கையில் அனைத்தையும் பகிரந்துகொள்பவவர்கள். இப்போது நாம் ஒரே இளைஞரையே காதலிக்கிறோம், ஒன்றாகத்தான் பாலியல் உறவிலும் ஈடுபடுகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
இவர்களின் காதலரான பென் பெயர்ன்னுக்கும் இரட்டைச் சகோதரர் ஒருவர் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தமது காதலர் குறித்து அதிக விபரங்களை பகிர்ந்துகொள்ள இச்சகோதரிகள் விரும்பவில்லை.
நாம் அவரை பாதுகாக்க விரும்புகிறோம். நாம் இருவராகத்தான் புகழ்பெற்றோம், மூவராக அல்ல’ என இச்சகோதரிகள் கூறுகின்றனர்.
71 வயதான தமது தாயுடன் இவர்கள் வசிக்கின்றனர். முதியவர்களுக்கு உணவு விநியோகிக்கும் தொழிலொன்றில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வேலை நேரத்தை பகிர்ந்துகொண்டு ஒன்றாக சம்பளம் வாங்குகின்றனர்.
சம்பளத்தில் பெரும்பகுதி தம்மை அழகுபடுத்திக்கொள்வதற்கும் ஒரே மாதிரியான ஆடைகள், ஆபரணங்களை வாங்குவதற்கும் செலவிடுவதாக இவர்கள் கூறுகின்றனர்.
‘நாம் வெளியில் செல்லும்போது எம் இருவரையும் காதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் விரும்புவதாக பல இளைஞர்கள் கூறுகின்றனர்’ என்கிறார் அனா.
நாம் இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து இருக்கும் நாளொன்றை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அப்படியொரு நிலை ஒருபோதும் வராது என எண்ணுகிறேன்’ என்கிறார் லூசி.
Average Rating