கனடா பிரதமரிடம் பந்தயத்தில் 2 பெட்டி ‘பீர்’ தோற்ற ஒபாமா
ஐஸ்ஆக்கி ஒலிம்பிக் போட்டியில் கனடா பிரதமரிடம் தோற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா 2 பெட்டி ‘பீர்’ அனுப்பி வைத்தார்.
கடந்த மாதம் (பிப்ரவரி) ரஷியாவில் உள்ள சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் நடந்த ஐஸ் ஆக்கி போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா ஆண்கள் அணி மோதியது.
இதில், அமெரிக்க அணி வெற்றி பெறும் என கனடா பிரதமர் ஸ்டீபன்கார்பரிடம் பந்தயம் கட்டியிருந்தார். மெக்சிகோவில் நடந்த வடஅமெரிக்க தலைவர்கள் மாநாட்டின்போது இவர்கள் பந்தயம் கட்டினர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா பந்தயத்தில் தோற்பவர்கள் அவர்கள் நாட்டில் தயாராகும் உயர்ரக பீர் பாட்டில்களை பரிசாக அனுப்ப வேண்டும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் அதில் 1–0 என்ற கோல் கணக்கில் கனடா வெற்றி பெற்றது. அதேநேரம் அமெரிக்க பெண்கள் ஆக்கி அணி 3–2 கோல் கணக்கில் வென்றது.
இதற்கிடையே டொரண்டோவில் நடந்த ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்ற கனடா பிரதமர் ஹார்பர் பந்தயத்தில் தோல்வி அடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இருந்து தனக்கு பீர்பாட்டில்கள் இன்னும் வரவில்லை என ‘ஜோக்’ அடித்தார்.
இதுபற்றிய தகவல்கள் ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து 2 பெட்டி ‘பீர்’ பார்சல்களை வாஷிங்டனில் உள்ள கனடா தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார்.
அதில் ஒன்று வெள்ளை மாளிகை தோட்ட மலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன் கலந்த பீர் ஒரு பெட்டியும், மற்றொரு தேன் கலந்த மற்றொரு பெட்டி பீர் பாட்டில்களும் அடங்கும்.
இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கனடா வீரர்கள் பெற்ற வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பந்தயத்தில் ஒபாமா தோற்றது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வான்குவர் நகரில் நடந்த ஆக்கி போட்டியின்போதும் கனடா அணியிடம் அமெரிக்க தோற்றது.
அப்போதும் பந்தயம் கட்டி தோற்ற ஒபாமா பீர் பாட்டில்களை அனுப்பி வைத்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating