விமான விபத்து: பயங்கரவாதிகளின் கைவரிசையா?

Read Time:4 Minute, 38 Second

010239 பயணிகளுடன் மலேஷியாவிலிருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைவர் பீஜிங்கிற்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.40 மணியளவில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

239 பேருடன் காணாமல் போன குறித்த மலேஷிய விமானம், வியட்நாமின் தோசு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை வியட்நாம் கடற்படை அதிகாரி ஒருவர் அரச செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வியட்நாம் கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் இல்லாததால், அருகில் உள்ள தீவுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காக படகுகளை கொண்டுவர உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேஷிய எயார்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 777- 200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானத்தில் 12 சிப்பந்திகள், 2 குழந்தைகள் உட்பட 239 பேர் பயணித்துள்ளனர்.

விமானம் காணாமல் போனமை குறித்து மலேஷிய எயார்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,’எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதே நாளில் காலை 6.30 மணிக்கு பீஜிங் விமான நிலையத்திற்கு விமானம் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் அதிகாலை 2.40 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது. விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகளில் 150 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என அந்நாடு அறிவித்துள்ளது.

மேலும், காணாமல் போன விமானம் சீன வான்வழி போக்குவரத்து மேலாண்மை துறையுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் ஐந்து இந்தியர்கள் பயணித்ததாக தகவல் ஒன்று கூறுகின்றது.

இந்நிலையில் குறித்த விமானம் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக விபத்துக்குள்ளாகி இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடத்திய விசாரணையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த 4 பேர், போலி பயண சீட்டில் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் விமானம் மாயமானதில், பயங்கரவாத அமைப்புக்களின் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இதேவேளை மாயமான விமானம் தன் திசையை மாற்றிக் கொண்டு மீண்டும் கோலாலம்பூர் நோக்கி பயணித்தருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மலேசிய அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வகுப்பறையில் சத்தமிட்ட மாணவர்களின் வாயை செலோடேப்பினால் ஓட்டிய ஆசிரியை..
Next post தந்தையின் தாக்குதலில் மகன் உயிரிழப்பு