நாய்களிடம் 100 முறை கடிபட்ட 7 வயது சிறுமி உயிர் ஊசல்..
உணவுத் துறையில் பணிபுரிந்துவரும் ஜப்பானியப் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணான 7 வயது சகுராகோஉயேஹராவை நியுசிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அவளது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர்.
நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள முருபரா என்ற இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவோரி மொழிப் பள்ளியில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டாள்.
ஒரு மாதம் கழிந்தபின் நீண்ட நாட்கள் தாங்களும் இங்கு வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்பொருட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் ஜப்பானுக்குத் திரும்பி வர முடிவு செய்தனர்.
ஊருக்குத் திரும்புவதற்குமுன் கடந்த திங்கட்கிழமையன்று சகுராகோவின் குடும்பத்தினர் அதே பகுதியில் வசித்துக்கொண்டிருக்கும் தங்கள் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கேதான் அந்த விபரீதம் நடந்துள்ளது. அவர்கள் வீட்டில் வளர்த்துவந்த நான்கு காவல் நாய்களிடம் அந்த சிறுமி மாட்டிக்கொள்ள நேர்ந்தது.
நடைபெறும் சம்பவத்தை உணர்ந்து அந்த சிறுமியை அவர்கள் காப்பாற்றுவதற்குள் அவளை 100 முறை அந்த நாய்கள் கடித்துள்ளன.
இத்தனை கடிகளைப் பெற்றபோதும் அந்த சிறுமிக்கு உணர்வு இருந்துள்ளது. கவலைக்கிடமான நிலைமையில் அந்த சிறுமி ஆக்லாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
அவளைத் தாக்கிய நாய்களை அந்தக் குடும்பத்தினர் கருணைக்கொலை செய்துவிட்டனர். ஆபத்தான நிலைமையைத் தாண்டாதபோதும் சிறுமியின் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமி வளர்ந்த நிலையை அடையும்வரை அவளுக்குத் தொடர் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் என்று அந்த மருத்துவமனையில் பணிபுரியும் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் சாக் மொவாவேனி தெரிவித்துள்ளார்.
நாய்களின் உரிமையாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றது.
சிறுமியின் நிலை குறித்து கவலை கொண்ட பார்வையாளர்கள் அவளது சிகிச்சைக்காக அந்நாட்டு பணமதிப்பில் 1,00,000 டாலர் நன்கொடை அளித்துள்ளனர்.
இவற்றுக்கெல்லாம் நன்றி தெரிவித்துள்ள சகுராகோவின் குடும்பத்தினரோ, அவள் மீண்டுவர இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating