உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?

Read Time:2 Minute, 14 Second

1dc03e20-aba0-4405-b599-493921d3e6d8_S_secvpf‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகத்தை முடித்த கையோடு கமல், தன்னுடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்.3-ந் தேதி பெங்களூரில் தொடங்கியது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டர் மற்றும் டீசர்களில் வெளியான கமலின் தோற்றம், பிரெஞ்சு புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து திருடப்பட்டதாக இணையதளங்களில் பரவத் தொடங்கின. உண்மையில், இந்த தோற்றம் கேரளாவில் தெய்யம் என்ற ஆட்டத்தில் ஈடுபடும் கலைஞனுக்குண்டானது. கேரளாவின் வடக்கே மலபாரில், ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றியபின் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடப்படும் ஒரு நடன வகைதான் தெய்யம்.

இந்த ஆட்டக்கலையை தெய்யாட்டம் எனவும், வேடத்தை தெய்யக்கோலம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆட்டத்தின் சிறப்பை தமிழுக்கு அறிமுகப்படுத்தவே உலக நாயகன் இந்த படத்தில் தெய்யக்கோலத்தில் தோன்றுகிறாராம். அதைவிடுத்து, அவர்மீது திருட்டு பட்டம் கூறுவது சரியல்ல.

மேலும், படத்திற்கு படம் சினிமாவில் ஏதாவது புதுமுயற்சியை கையாள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் கமலின் இந்த புதுமுயற்சியை களங்கடிக்க நினைப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்கரைப்பற்றில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
Next post பணத்துடன் மேலாடையை முதலையிடம் பறிகொடுத்த பண்ணையாளர்..