தம்பிராசாவின், கொட்டகையை காணவில்லை

Read Time:1 Minute, 50 Second

thambyrajaயாழ்ப்பாணம், வலி. வடக்கு, மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவின் போராட்டக் கொட்டகை இன்று காலை முதல் காணவில்லை.

கடந்த பெப்ரவரி 21ஆம் திகதியிலிருந்து சத்தியாகிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தம்பிராசா, தினமும் காலை 8 மணி முதல் 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், இன்று காலை சத்தியாக்கிரக் போராட்டத்தினை முன்னெடுக்க வந்தவேளை அவருடைய கொட்டகைகள், பதாகைகள் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தம்பிராசா, ’13ஆவது நாளாக நான் இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று என்னுடைய கொட்டகைகள் பதாகைகள் காணாமல் போயுள்ளன.

இரவு இப்பகுதியில் இராணுவத்தினர் இருந்ததாக சிலர் கூறினர். அவர்களே இதனைக் கொண்டு சென்றிருக்கலாம்’ என்றார்.

அத்துடன், இன்று மாலை போராட்டத்தினை முடித்த பின்னர் இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு, துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து குடும்பஸ்தர் மரணம்
Next post வடக்கு முதல்வருக்கு, ஆனந்தசங்கரி கடிதம்..