சுவிட்ஸர்லாந்தில், கல்லூரி வகுப்பறையில் ஆபாச வீடியோ காண்பித்த பேராசிரியர்!

Read Time:2 Minute, 23 Second

45181வணிகக் கல்லூரியொன்றின் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் தவறுதலாக பாலியல் வீடியோ காண்பித்த சம்பவம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

இப்பேராசிரியர் மாணவர்களுக்கான பாடத்தை நடத்தி முடித்த பின்னர் தனது மடிக்கணினி மூலம் ஆபாச இணையத்தளமொன்றை பார்வையிட்டுள்ளார்.

ஆனால், அவரின் பாடம் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அக்கணினிக்கும் வகுப்பறையிலிருந்த புரொஜெக்டர் திரைக்கும் இடையிலான தொடர்பை துண்டிப்பதற்குஅவர் மறந்துவிட்டார்.

அதனால் அப்பேராசியர் மடிக்கணினியில் பார்த்துக்கொண்டி ஆபாச வீடியோ காட்சிகள் வகுப்றையின் திரையிலிருந்த திரையிலும் தென்பட்டன.

வகுப்பறை அப்போது வெறுமையாக இருந்தபோதிலும் தூரத்திலிருந்த மாணவர்களுக்கு திரையில் ஆபாசப்படம் ஓடுவது தெரிந்தது.

கல்லூரியின் பணிப்பாளர் ரெனே போர்டெய்னர் இது குறித்து கூறுகையில், ‘இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சயளிக்கிறது. அந்த பேராசிரியர் உடனடியாக என்னிடம் வந்து தான் கல்லூரியின் கணினியில் பாலியல் வீடியோக்களை பார்த்ததாக கூறினார்.

அவர் மிக சங்கடமாகவும் பதற்றமான நிலையிலும் காணப்பட்டார். ஏன் அப்படி செய்தார் என்பதை அவரால் எனக்கு விளக்கமுடியவில்லை’ என்றார்.

கல்லூரியின் தலைவர் ரொல்வ் பிளிட்ஸ் இது தொடர்பாக கூறுகைளில், இப்பேராசிரியர் 40 வருடங்களாக இக்கல்லூரியில கற்பிக்கிறார். அவர் மிகப் பிரபலமானவர். அவரின் நடத்தை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது’ என்றார்.

குறித்த பேராசிரியருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விபரம் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒஸ்கார் விருதுகள் 2014 : முழுவிபரப் பட்டியல்.. (PHOTOS)
Next post வெள்ளவத்தையில் விபசாரவிடுதி: ஐவர் கைது