அனந்திக்கு எதிராக முறைப்பாடு

Read Time:2 Minute, 6 Second

ananthi.003வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில், யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் நேற்;று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

தான் இல்லாத சமயம் தனது நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அனந்தி சோதனை செய்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் அனுமதி பெறாமல் யாழ்.அரியாலை ஆனந்தன் கடை வீதியில் இயங்கி வந்த விடுதி மற்றும் யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் கிளப் என்பன யாழ்.பொலிஸாரினால் நேற்று முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த 5 பெண்கள் உட்பட எட்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் 5 பேரும் 23 வயதிற்கும் 36 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் அநுராதபுரம், மாத்தளை, கிளிநொச்சி, மற்றும் யாழ். உரும்பிராய் பகுதிகளினைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் உள்ளிட்டவர்களும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் இன்று யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலிய சாலை விபத்தில் 4 பேர் பலி: இந்திய வம்சாவளி டிரைவர் மீது வழக்கு
Next post ஒஸ்கார் விருதுகள் 2014 : முழுவிபரப் பட்டியல்.. (PHOTOS)