உணவகத்தில் கைத்துடைக்க துண்டு கொடுக்காததால் நஷ்டஈடு வழக்கு

Read Time:1 Minute, 49 Second

usa.flagஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பகோய்மா நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் துரித உணவகத்தில் வெப்ஸ்டர் லூகாஸ் என்பவர் தனக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்கு உணவு பரிமாறப்பட்டபோது அத்துடன் ஒரு கைத்துண்டு மட்டுமே வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதனால் கவுன்ட்டரிலிருந்த விற்பனையாளரை அணுகிய லூகாஸ் தனக்குக் கூடுதலாக ஒரு துண்டு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு கூடுதல் துண்டு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அவருக்கு இலவசமாக ரொட்டித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியினால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தன்னால் தனது பணியை சரிவர செய்யமுடியவில்லை என்றும் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு லூகாஸ் ஒரு புகார் அளித்தார்.

ஆப்பிரிக்க அமெரிக்கனான தன்னை உணவகத்தின் மேலாளராக இருந்த மெக்சிகன் அமெரிக்கன் இனவெறியைத் தூண்டும்விதமாக தகாத வார்த்தையில் குறிப்பிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள லூகாஸ் இதற்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர் கேட்டு வழக்கும் பதிவு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொழில் அதிபர் ஒருவருடன் துபாயில் ஜோடியாக சுற்றிய காஜல் அகர்வால்
Next post ”நடிகைகள் குண்டாக இருந்தால் தான், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது”