சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?

Read Time:3 Minute, 21 Second

018hசிம்புவும், ஹன்சிகாவும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள்.

இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டனர்.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தவர்கள்.’வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கமானார்கள். பின்னர் அந்த காதல் முறிந்து போனது.

அதன் பிறகு பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலித்தார்கள். திருமணத்துக்காக நயன்தாரா இந்து மதத்துக்கும் மாறினார். பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்தார். திருமணத்துக்கு தயாராகி வந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது.

எனவேதான் நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேர்வதை ஹன்சிகா வெறுத்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அத்துடன் படப்பிடிப்பில் சிம்பு, நயன்தாரா நெருக்கமாகவும், சிரித்து பேசிக் கொண்டும் இருப்பது போன்ற படங்கள் வெளியாயின. இதுவும் ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

நயன்தாரா என் தோழி, ஹன்சிகா என் காதலி என்று சிம்பு பேட்டி அளித்தார். தொழில் ரீதியாக நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதை ஹன்சிகா தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்றும் விளக்கம் அளித்தார். ஆனால் ஹன்சிகா சமாதானம் ஆகவில்லை. இருவருக்கும் தகராறு வெடித்தது.

இந்நிலையில் நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம் என்று சிம்பு நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். ஹன்சிகாவுடனான உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை. என் தொழில் மீது கவனம் செலுத்தப்போகிறேன். மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்றார்.

ஹன்சிகாவை பிரிந்ததால் சிம்பு, நயன்தாரா நட்பு மீண்டும் இறுக்கமாகியுள்ளது. பழைய காதலை இருவரும் புதுப்பிப்பார்கள் என்று பேச்சு அடிபடுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்: த்ரிஷா நச்
Next post பேஸ் புக்கில் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்