காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்: த்ரிஷா நச்

Read Time:2 Minute, 33 Second

018gகாதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்றார் த்ரிஷா. இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. எந்தவொரு உறவும் குறிப்பிட்ட நேரத்தில்தான் அமையும். அதுபோல் காதலும் சரியான நேரத்தில் வரும்.

அந்தநாள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. சரியான நேரம் வந்ததும் கண்டிப்பாக காதல் பற்றி வெளிப்படையாக பதில் சொல்வேன். எனது காதலன் யார் என்பதை கூறுவேன். தெலுங்கு படங்களில் நடிக்க நான் மறுப்பதாக கூறுகிறார்கள்.

ஆரம்ப காலங்களில் தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. நிறைய படங்களில் நடித்தேன். ஆந்திராவிலேயே வெகு காலம் இருக்க வேண்டி இருந்தது.

அதனால் அடிக்கடி எல்லோர் கண்ணிலும் பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் கேட்ட கோலிவுட் நிருபர்கள் தமிழ் படங்களை தவிர்ப்பது ஏன் என்றார்கள்.

தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தமிழ்நாட்டிலேயே இருக்கிறேன். ஆந்திராவில் தங்க முடியாத சூழல் இருப்பதால் அங்குள்ளவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்காதது ஏன் என்கிறார்கள்.

எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்னை என்று அடிக்கடி எழுதிவந்தார்கள். ஆனால் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. மீடியாவில் வந்த செய்திகளால் சில சமயம் கருத்துவேறுபாடு இருந்திருக்கலாம்.

ஆனால் நாங்கள் நேரில் சந்திக்கும்போது அது எல்லாமே வதந்தி என்பது புரிந்துவிடும். எங்களுக்குள் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் தோழிகளாக இருக்கிறோம். இவ்வாறு த்ரிஷா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் 17 வயது மாணவனை மணந்த 35 வயது ஆசிரியை கைது
Next post சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?