பாகிஸ்தானின் கிராம பகுதியில் செக்ஸ் கல்வி கற்கும் சிறுமிகள்
பாகிஸ்தான் நாட்டில் 18 கோடிக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் இஸ்லாமிய நாடு. அங்கு பெண்களுக்கு என்று குடும்பங்களில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
அதன்படி, அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்ப்பது கூடாது. திருமண விழாவில் கலந்து கொள்ளும்போது நடனமாட கூடாது.
அப்படி தங்களது மகள்கள் செய்வதை பெற்றோர் கண்டால் உடனடியாக அதனை குற்றம் என கருதி அவர்களை அமிலத்தில் மூழ்க வைத்து எடுத்து விடுவார்கள்.
அல்லது அவர்களது மகளின் கழுத்தை அறுத்து விடுவார்கள். அந்தளவிற்கு உள்ளது அந்நாட்டில் பெண்களின் மீதான கட்டுப்பாடு.
நிலைமை இப்படி உள்ள நிலையில், பெண்களுக்கு செக்ஸ் கல்வி என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. சில இடங்களில் அது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் செக்ஸ் கல்வி என்பது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் பெரும்பாலும் எந்த பகுதியிலும் வழங்கப்படுவதில்லை. ஆனால், வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிந்த் மாகாணத்தில் உள்ள ஜோஹி கிராம பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் செக்ஸ் கல்வியை வரவேற்பதாக அங்குள்ள ஆசிரியர்கள் கூறுகின்றனர். கிராம ஷாதாபாத் அமைப்பினரால் எட்டு உள்ளூர் பள்ளி கூடங்கள் நடத்தப்படுகின்றன. அதில், சுமார் 700 சிறுமிகள் படித்து வருகின்றனர்.
அவர்களுக்கான செக்ஸ் கல்வி அவர்களது எட்டு வயதில் இருந்து தொடங்குகிறது. அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களது உரிமைகள் என்ன மற்றும் அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பன போன்று பாடங்கள் அமைந்துள்ளன.
அதன்படி, மாணவிகள் வரிசையாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஆசிரியர், உடலில் ஏற்படும் மாற்றம் குறித்து விவரிக்கிறார். அதன் பின் அவர், அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் உங்களை தொட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேட்கிறார்.
மாணவிகளிடையே சலசலப்பு ஏற்படுகிறது. ஒரு ஆசிரியர் தனது கையில் உள்ள அட்டையை எடுத்து மாணவிகளிடம் காட்டுகிறார். அந்த அட்டையில், மாணவி ஒருவரை ஆசிரியர் தகாத இடங்களில் தொடுவது போன்ற ஓவியம் இடம் பெற்றுள்ளது. ஒரு மாணவி சத்தம் போட்டு அலற வேண்டும் என்கிறார். மற்றொரு மாணவி கடித்து விட வேண்டும் என கூறுகிறார்.
உங்களது நகங்களால் அவர்களை கடினமாக பிராண்டி விட வேண்டும் என்று இன்னொரு மாணவி கூறுகிறார். பாகிஸ்தான் நாட்டில் தனது மனைவியை வற்புறுத்தி கணவர் செக்ஸ் வைத்து கொள்வது என்பது குற்றமாகாது.
ஆனால், திருமணத்திற்கு பின்பு மனைவியின் ஒப்புதல் இல்லாமல், நடைபெறும் செக்ஸ் என்பது குற்றம் என்ற வகையிலும் மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இந்த எட்டு பள்ளிகளுக்கும் ஆஸ்திரேலிய நிறுவனமான பி.எச்.பி. பில்லிடன் நிதி அளிக்கிறது. அந்நிறுவனம் அருகில் உள்ள இடத்தில் எரிவாயு தொழிற்சாலையை இயக்கி வருகிறது.
ஆனால், பள்ளியில் செக்ஸ் கல்வி என்பது கிராமத்தினரின் சொந்த விருப்பத்திலேயே நடக்கிறது. ஆசிரியை சாரா பலோச் கூறும்போது, பருவ வயதை அடைகிறபோது ஏற்படும் மாற்றங்கள் அவமானகரமானவை என்று மாணவிகள் கருதுகின்றனர்.
இதனை தங்களது பெற்றோரிடம் அவர்கள் கூறுவதில்லை.
தாங்கள் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கருதி கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறார். ஆசிரியை என்ற முறையில், வளர்ச்சி என்றால் என்ன என்பது குறித்து மாணவிகளுக்கு அவர் தெளிவாக விளக்குகிறார்.
இந்த அமைப்பின் தலைவர் அக்பர் லஷாரி கூறும்போது, செக்ஸ் கல்வி குறித்து பேசுவதற்கு மக்கள் விரும்புவதில்லை. ஆனால் அது நம்முடைய வாழ்வின் உண்மையான விசயம் என கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கிராமத்தில் வசிக்கும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள், தாங்கள் பருவ வயதினை அடைகிறோம் என்பது குறித்த புரிதல் இல்லாமலேயே உள்ளனர்.
அந்த வயதை கடக்கவும் செய்கின்றனர். அவர்களில் பலர், செக்ஸ் குறித்த விவரங்கள் தெரியாமலேயே திருமணம் என்ற பந்தத்தில் நுழைகின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அனைத்து பாகிஸ்தானிய தனியார் பள்ளிக்கூட அமைப்பின் தலைவர் மிர்சா காஷிப் அலி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது எங்களது அரசியலமைப்பு மற்றும் மதத்திற்கு எதிரானது. நீங்கள் மேற்கொள்ளாத ஒரு காரியத்தை குறித்து அறிந்து கொள்வதின் நோக்கம் என்ன? பள்ளி அளவில் இது அனுமதிக்கப்பட கூடாது என்று கூறுகிறார்.
சிந்த் மாகாண கல்வி துறை மந்திரி நிசார் அகமது இவ்விசயத்தை கேட்டவுடன் அதிர்ச்சியுடன் கருத்து கூறுகிறார். சிறுமிகளுக்கு செக்ஸ் கல்வியா? அவர்கள் எப்படி அதனை நடத்தலாம்? எங்களது பாட திட்டத்தில் அது இல்ல
தனியார் அல்லது பொது பள்ளிக்கூடம் எதுவாக இருந்தாலும் இதற்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார். எனினும், அந்நாட்டின் மத அமைப்பான பாகிஸ்தான் உலமா கவுன்சில் தலைவரான தாஹிர் அஷ்ரபி கூறும்போது,
இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு இத்தகைய பாடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் பெண்களாக இருந்தால், ஷரியாவுக்கு (மத சட்டம்) உட்பட்டு மாணவிகளுக்கு அது போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Average Rating