நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது

Read Time:1 Minute, 59 Second

9cf87fbe-நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அச்சிறுவனை பல இடங்களில் தேடினர். பின்னர் சேரிஸ் எலிவிஸ்சிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் வீடு முழுவதும் தேடினர்.

அப்போது எலிவிஸ் தனது 4 வயது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்து உடலை மறைந்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

மேலும் அவர் அடிக்கும் போது கத்தாமல் இருக்க சிறுவனின் வாய்க்கு பூட்டு போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் எலிவிஸ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீஸார் தாக்கல் செய்த மனுவில், “எலிவிஸ், அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். சூடான இரும்பு கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்து உள்ளார்.

பின்னர் ஒரு பிளாஸ்டிக் டிரம்பில் போட்டு அடைத்து உள்ளார்” என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணையில் எல்விஸ்க்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையே மகனை இவ்வாறு கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதி சடங்கின் போது அறுந்து வீழ்ந்த பாலம்: 9 பேர் பரிதாபமாக பலி
Next post எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி