இறுதி சடங்கின் போது அறுந்து வீழ்ந்த பாலம்: 9 பேர் பரிதாபமாக பலி

Read Time:1 Minute, 24 Second

article-2567684-1BD2FCB700000578-937_634x473இறந்த நபர் ஒருவரின் சவப்பெட்டியுடன் பாலம் ஒன்றின் மீது ஊர்வலமாக சென்று கொண்டிருந்த போது பாலம் உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் பலியான பலர் காயமடைந்த சோகச் சம்பவம் வியட்நாமில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 65 அடி உயரமான பாலம் ஒன்றின் மீது 50க்கும் மேற்பட்ட நபர்கள் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதன்போது பாலம் பாரம் தாங்காது அறுந்து வீழ்ந்துள்ளது.

பாலத்திற்கு கீழே பாரிய பாறைகள் காணப்பட்டதால் பாறைகளின் மீது வீழ்ந்தவர்களில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலம் கட்டப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வாறு பாலம் அறுந்து வீழ்ந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

527446198
vietnam26n-1-web

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனின் மர்ம உறுபை கடித்தவர், விளக்கமறியலில் வைப்பு
Next post நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது