குட்டைப் பாவாடைக்குத் தடை: பெண்கள் ஆர்ப்பாட்டம்!

Read Time:1 Minute, 43 Second

sex.womanஉகாண்டாவில் குட்டைப் பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா சமூக பழைமைவாதிகள் நிரம்பிய நாடாகும். இங்கு கடந்த சில வாரங்களில் தொடை தெரியும் சிறிய உடைகளை அணிந்து சென்ற பெண்கள் கேலி செய்யப்பட்டதும் பகிரங்கமாகத் துன்புறுத்தப்பட்டதுமான சில சம்பவங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அதிபர் யோவெரி முசேவெனி பெண்களுக்கான குட்டைப் பாவாடைகளைத் தடை செய்யும் ஆபாச எதிர்ப்பு சட்டமூலம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால், இந்தப் புதிய விதிமுறையை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் அந்நாட்டின் தேசியத் திரையரங்கம் முன்னால் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அவர்களில் பலரும் குட்டைப் பாவாடையினை அணிந்துகொண்டு எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்த அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

இந்த வாரம்தான் அங்கு ஓரினச் சேர்க்கை மக்களுக்கான விதிமுறைகளையும் கடுமையாக்கிய சட்டமூலம் ஒன்றும் அதிபரின் கையெழுத்துடன் சட்டமாக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் இன்றும் மோதல்: ராஜீவ் சிலை 3 இடங்களில் உடைப்பு
Next post யாழ். பல்கலை மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு