ஒட்டகச்சிவிங்கியாக மாறிய யுவதி…

Read Time:1 Minute, 49 Second

4469_article-2567616-1BD0C6BE00000578-202_306x446

4469_pppபிரிட்டனை சேர்ந்த யுவதி ஒருவர் தனது உடல் முழுவதும் ஒட்டகச்சிவிங்கி போல வர்ணம் தீட்டி பேஸ்புக்கில் பதிவு செய்து மிகவும் அதிகளவான வாக்கினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த யுவதியொருவர் தனது உடல் முழுவதும் ஒட்டகசிவிங்கி போல வர்ணம் தீட்டிக் கொண்டு, உடலை வளைத்து ஒட்டகச்சிவிங்கி போல் போஸ் கொடுத்துள்ளார்.

இப்புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.

20 வயதான பேத் ஸைக்ஸ் எனும் யுவதி 5அடி 5அங்குல உயரம் கொண்டவர். இவர் 4 வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்கில் ஈடுபட்டு, 12ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெரு வெற்றிகளைப் பெற்றவர்.

தனது உடலை இறப்பர் போல வளைக்கும் திறமை படைத்த இந்த யுவதி ஒட்டகச் சிவிங்கி போன்று தனது உடல் முழுவதும் வர்ணம் தீட்டியதுடன் உடலை வளைத்து ஓர் அசல் ஒட்டகச்சிவிங்கியை போன்று போஸ் கொடுத்தார்.

இவரின் நண்பியான எம்மா ஃபே எனும் கலைஞர், பேத் ஸைக்ஸின் உடலில் ஒட்டகச்சிவிங்கி போல் உடலில் வர்ணம் தீட்டியுள்ளார். இதற்கு ஆறு மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக எம்மா ஃபே தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை பேஸ்புக்கில் 100,000 இற்கு அதிகமானோர் ‘லைக்’ செய்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 நிமிடங்கள் டெக்ஸினுள் உறவு கொண்ட ஜோடி, கட்டணம் செலுத்த மறுப்பு
Next post சென்னையில் இன்றும் மோதல்: ராஜீவ் சிலை 3 இடங்களில் உடைப்பு