மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற வாலிபர்

Read Time:3 Minute, 48 Second

1f03a14திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி வசந்தி (50). நேற்று காலை வீட்டிற்குள் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது மகன் பாபு, பக்கத்து வீட்டு வாலிபர் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து வசந்தியை கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கார்த்திக் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

நானும், பாபுவும் நண்பர்களாக பழகி வந்தோம். அடிக்கடி அவனது வீட்டிற்கு செல்வேன். அப்போது பாபுவின் மனைவி விஜயலட்சுமிக்கும், எனக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் ஜாலியாக இருந்தோம்.

சில நாட்களுக்கு முன்பு பாபுவின் தாய் விஜயலட்சுமிக்கு எங்களது கள்ளத் தொடர்பு தெரிந்தது. ஆனால், அவர் வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல் விஜயலட்சுமியை கண்டித்தார்.

இதனால், விஜயலட்சுமி ஆவடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இது பற்றி தெரியாமல் தாயுடன் மோதலால்தான் மனைவி பிரிந்து சென்று விட்டதாக பாபு நினைத்து இருந்தார்.

நேற்று முன்தினம் நாங்கள் இருவரும் விஜயலட்சுமியை அழைத்து வருவதற்காக அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றோம். ஆனால், விஜய லட்சுமி வர மறுத்துவிட்டார். ஏமாற்றத்துடன் திரும்பிய பாபு, மனைவி வராததற்கு தாய் வசந்தியே காரணம் என்று திட்டினார்.

இதையடுத்து இரவில் நாங்கள் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது, விஜயலட்சுமியுடன் உள்ள கள்ளக்காதலை வசந்தி யாரிடமும் தெரிவிக் காததால் அவரை தீர்த்துக் கட்டிவிட்டு மீண்டும் ஜாலியாக இருக்கலாம் என்று திட்டமிட்டேன்.

பாபுவிடம், உனது தாயை தீர்த்துக் கட்டினால், நீ மனைவியுடன் எந்த பிரச்சினையும் இன்றி இருக்கலாம் என்று தெரிவித்தேன். அவனும் கொலை செய்ய ஒப்புக் கொண்டான். சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த வசந்தியை இரும்பு கம்பியால் இருவரும் கழுத்தை நெரித்துக் கொன்றோம்.

பின்னர், கத்தியால் கழுத்தில் குத்துவிட்டு தப்பி சென்றுவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனைவியின் கள்ளகாதலன் சதிவலை தெரியாமல் தாயை கொன்றது பற்றித் தெரிந்ததும் பாபு அழுது புரண்டார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை தப்சி – (படங்கள் இணைப்பு) -அவ்வப்போது கிளாமர்-
Next post 40 நிமிடங்கள் டெக்ஸினுள் உறவு கொண்ட ஜோடி, கட்டணம் செலுத்த மறுப்பு