பரபரப்பான ஆசியக் கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை

Read Time:2 Minute, 40 Second

4435SriLankaபரப்பான ஆசியக்கிண்ண முதல் போட்டியில் 12 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இன்று ஆரம்பமான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி நடப்புச் சம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டது.

பங்களாதேஷின் பதுல்லா விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமன்ன சிறப்பாக துடுப்பெடுத்தாடி 110 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 102 ஓட்டங்களைப் பெற்றார். ஒருநாள் போட்டிகளில் திரிமன்னவின் 2 சதமாகும்.

குமார் சங்கக்கார 67 ஓட்டங்களையும் அணித்தலைவர் மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஷஹீட் அப்ரிடி மற்றும் உமர் ஆகியோர் தலா இரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வெற்றியின் விளிம்பு வரையில் வந்து பரப்பினை ஏற்படுத்தி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் 73 ஓட்டங்களையும் உமர் அக்மல் 74 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் இறுதியில் மீண்டுமொரு பந்துவீச்சில் மிரட்டிய லசித் மலிங்க 49 ஓவரில் இலங்கை அணி வெற்றி பெற காரணமானார்.

9.5 ஓவர்களை வீசிய லசித் மலிங்க 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை சாய்த்தார். போட்டியின் ஆட்டநாயகனாக லசித் மலிங்க தெரிவானார்.

இத்தொடரின் 2ஆவது போட்டியில் நாளை இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஒபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி
Next post இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கமில்லை: ஜனாதிபதி