நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது: கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்

Read Time:1 Minute, 59 Second

0743ee09bec9ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை வந்தபோது, ஒல்லியாக இருந்தேன். எனக்கு தமிழும் தெரியாது. இந்த இரண்டு குறைகளையும் போக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

நடிகைகள் ஒல்லியாக இருந்தால் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் குண்டாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் ரசிப்பார்கள். எனவே முதலில் என் எடையை அதிகரித்தேன்.

அதன்பிறகு தமிழ் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். தமிழ் இனிமையான மொழி. அழகான மொழி. நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு அழகாக-சரளமாக தமிழ் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நிச்சயம் பேசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என் முதல் படமான ‘ரேணிகுண்டா’வில் நடித்தபோது முதல்நாளே டைரக்டரிடம் இருந்து வசனத்தை வாங்கி விடுவேன். மறுநாளே தமிழில் பேசி நடித்துக்காட்டுவேன்.

டைரக்டர் பன்னீர்செல்வம் ஆச்சரியப்படுவார். இரண்டு மூன்று படங்களில் நான் கவர்ச்சி பாடல்களுக்கு ஆடினேன். அது எனக்கு பிடிக்கவில்லை.

கதாநாயகியாகவே ஆசை. குறைந்தபட்சம் இரண்டாவது கதாநாயகி வேடமாவது வேண்டும்.’ இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் இளைஞரின் சடலம் மீட்பு
Next post மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஒபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி