தொலைபேசியில் காதலியின் நிர்வாணப் படங்கள்

Read Time:2 Minute, 56 Second

t.phone-sowerகைத்தொலைபேசியில் தனது பாடசாலை காதலியின் நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் பாடசாலை மாணவனை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி குருணாகலை நீதவான் நீதிமன்ற நீதவான் ரவீந்திர பிரேமரட்ன உத்தரவிட்டார்.

குருணாகல் நகரிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

இம்மாணவனுக்கும் குருணாகலையிலுள்ள மகளிர் பாடசாலையொன்றின் மாணவியொருவருக்குமிடையே ஏற்பட்ட காதல் தொடர்பு சில காலத்துக்கு முன்னர் முறிவடைந்துள்ளது.

இதனால் ஆத்திரமுற்ற மாணவவன் தன்னிடமுள்ள மாணவியின் நிர்வாண புகைப்படத்தை ”பேஸ்புக்” இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக மாணவியை அச்றுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேகநபரான மாணவனால் மாணவி கல்வி பயிலும் பாடசாலையின் மதில் சுவரில் அவரை அச்சுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரமொன்றை ஒட்டியிருந்ததாகவும் இதனால் மாணவியின் பெற்றோர் குருணாகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சினையை சமரசமாக முடித்துள்ளனர்.

இருந்தும் மாணவியின் பெற்றோர் மாணவியின் மேலதிக பாதுகாப்புக்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தொலைபேசி முறைப்பாட்டு பிரிவுக்கு செய்த முறைப்பாட்டையடுத்து அதிகார சபையின் புலனாய்வப் பிரிவினர் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபரான மாணவனது வீட்டுக்குச் சென்று மாணவனின் கைத்தொலைபேசியை பரீட்சித்தபோது முறைப்பாட்டாளரான மாணவியின் பல நிர்வாணப் படங்கள் அதில் காணப்பட்டதாகவும் இதன்படி மாணவன் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். சங்குவேலியில் வாள் வெட்டு; இருவர் காயம்
Next post கைத்தொலைபேசியை பெற்றோர் திருப்பித்தர மறுத்தமையால் மாணவி தற்கொலை