பெண்ணுக்கு மாந்திரீக எண்ணெய் தேய்ப்பதாக கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

Read Time:2 Minute, 10 Second

pikku-07பெண்ணொருவருக்குப் பரிகாரப் பூஜை நடத்திய பிக்கு ஒருவர் நள்ளிரவு வேளையில் மாந்திரீக எண்ணெய் தேய்ப்பது போன்று பாசாங்கு செய்து அவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டாராம்.

இவரை நாளை 26 ஆம் வரை விலக்க மறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிவான் ரொஹான் விஜேவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உடதும்பர பிரதேசத்தில் வீடொன்றில் 45 வயது பெண்ணொருவருக்கு பரிகாரப் பூஜை நடத்தப்பட்டது. இரவு வேளை இப் பூஜையை பிக்கு ஒருவரால் நடத்தப்பட்டது.

பூஜை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணின் கணவரையும் மகனையும் வேறொரு இடத்திற்கு செல்லுமாறு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

இதனையடுத்து அவர்கள் வெளியேறிக் சென்றனர்.

இதன் பின்னர் நள்ளிரவானதும் அப்பெண்ணை தனி அறைக்கு செல்லுமாறு பிக்கு கூறி அங்கு பெண்ணுக்கு மாந்தீரிக எண்ணெய் பூச வேண்டும் என தெரிவித்து பெண் மீது எண்ணெய் பூசுவது போன்று பாசாங்கு செய்து பாலியல் குற்றம் புரிய முற்பட்டுள்ளார்.

பிக்குவின் இச் செயலிலிருந்து தப்பித்த பெண் உடதும்பர பொலிஸ் நிலையத் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் பிக்குவை கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியப் போதே நீதிவான் அவரை 26 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து வாலிபருக்கு மரண தண்டனை
Next post மட்டக்களப்பு; தற்கொலை அங்கிகள் இரண்டு மீட்பு