உணவக பணிப்பெண்கள் மூவருக்கு தலா 6.5 இலட்சம் ரூபா டிப்ஸ் கொடுத்த பெண்

Read Time:2 Minute, 4 Second

44092சாதாரணமாக டிப்ஸ் என்றால் நாம் அனுபவித்த விடயத்துக்கு ஊழியம் செய்தவர்களுக்கு சிறு தொகையை அன்பளிப்பாக சில வேளைகளில் கொடுப்போம்.

ஆனால் அமெரிக்கப் பெண்ணொருவர் தனக்கு உணவு பரிமாறிய உணவகப் பணிப்பெண்கள் மூவருக்கு தலா 5 ஆயிரம் டொலர்களை (சுமார் 6.5 இலட்சம் ரூபா) டிப்ஸாக கொடுத்து வாய் பிளக்க வைத்துள்ளார்.

இச்சம்பவம் அண்மையில் அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்தின் கலடடொனிய நகரிலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்றுள்ளது.

‘குறித்த தினம் சனிக்கிழமையாக இருந்துள்ளது. வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தனர். இதன்போது உணவகத்துக்கு வந்த பெண் வாடிக்கையாளர் உணவத்தில் பணிப்பெண்களாக வேலை புரியும் எமி ஸபானி (25 வயது), ஸாரா ஸெகிங்கெர் (23 வயது) மற்றும் அம்பெர் கரியொலிச் (28 வயது) ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் டொலர் பெறுமதியான காசோலையை டிப்ஸாக வழங்கினார்’ என உணவக உரிமையாளர் மட் நெபியு தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தாங்கள் 500 டொலர்கள் என நினைத்தோம். பின்னர் சரியாக பார்க்கும் போது உண்மையான தொகை தெரிந்து அதனை ஏற்க நிராகரித்ததாக ஸபானி கூறியுள்ளார்.

இதனை உங்களது வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என டிப்ஸ் கொடுத்த பெண் கூறினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பணத்தைக்கொண்டு தனது கல்வியை தொடரவுள்ளதாக ஸாரா கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”
Next post ஆஸ்திரேலியாவில் ராட்சத மாம்பழம் மாயமான மர்மம்