விகாரைக்குள் புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது

Read Time:1 Minute, 23 Second

arrest-pikku1பேராதனை தெஹிகம வேரகல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நேற்று அதிகாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் உட்பட நால்வரை பேராதனை பொலிஸார் கைது செய்ததுடன் பூஜைப் பொருட்கள் மண்வெட்டி போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி. கன்னேவவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் அதிகாலை குறிப்பிட்ட விகாரைக்கு சென்றனர்.

அங்கு புதையல் தோண்டுவது தெரிய வந்தது. அதில் ஈடுபட்டிருந்த விகாரையின் பிக்கு ஒருவர் பூசகர் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்ததுடன் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி அலவாங்கு உட்பட பல்வேறு உபகரணங்களையும் பழ வகை, மலர்கள் அடங்கிய பூஜைத் தட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி மீது வயோதிபர் துஷ்பிரயோகம்
Next post 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்: யாழ் இளைஞன் கைது