அந்தரங்கத்தை அம்பலமாக்கும் ஷகிலா: சில்க் பாணியில் படமாகிறது

Read Time:2 Minute, 6 Second

shakeela-hot-pictures-6ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அஞ்சலி உள்ளிட்ட சில நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்படுகிறது. தமிழில் துணை நடிகையாகவும், காமெடி வேடங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார்

ஷகிலா. மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்த நிலையில் மலையாள படங்களில் படுகவர்ச்சி வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் மீது கவர்ச்சி நடிகை முத்திரை குத்தப்பட்டது.

அவர் நடித்த படங்கள் மல்லுவுட் ஹீரோக்களின் பட வசூலை பாதிக்கும் அளவுக்கு சக்கைபோடு போட்டது. 2000 ஆண்டு தொடக்கத்தில் திடீரென்று கவர்ச்சி வேடங்களுக்கு முழுக்குபோட்டு தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதினார். அதில் திரையுலகில் தன்னிடம் அந்தரங்கமாக தொடர்பில் இருந்தவர்களை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படம் இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார்.

அடுத்து மலையாளம், கன்னட படங்களிலும் சில்க் வாழ்க்கை படம் தயாரிக்கப்பட்டது. இவற்றில் சனாகான், இந்தி நடிகை வீனா மாலிக் நடித்தனர்.

தற்போது ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலி உள்ளிட்ட மேலும் சில ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் பரபரப்பு: மேயர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த நாய்
Next post மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது