சிம்புவுடன் காதல் முறிவா? -ஹன்சிகா பதில்

Read Time:2 Minute, 22 Second

003சிம்பு, ஹன்சிகா காதல் முறிந்து விட்டதாக செய்தி பரவி உள்ளது. ஏற்கனவே இருவரும் ஒருவரை யொருவர் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

சில மாதங்களுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கப்பட்டது. தற்போது சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காதல் முறிவுக்கு இதுவும் காரணம் என்கின்றனர்.

இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது நயன்தாராவுடன் நடிப்பதை ஹன்சிகா எதிர்க்கவில்லை என்றும் நயன்தாரா என் தோழி, ஹன்சிகா என் காதலி என்றும் தெரிவித்தார்.

ஆனால் ஹன்சிகா தனது டுவிட்டரில் யாருடனும் எனக்கு உறவு இல்லை. நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார். இதன் மூலம் காதல் முறிந்தது உண்மைதான் என பேசு கின்றனர்.

சிம்புவுடன் காதல் முறிந்துவிட்டதா என்று ஹன்சிகாவிடம் கேட்ட போது நான் அது பற்றி பேச விரும்பவில்லை என்றார். நேரம் வரும் போது நிச்சயம் இதுபற்றி பேசுவேன் என்றும் கூறினார்.

ரசிகர்கள் எனது திருமணம் பற்றி பேசுகிறார்கள். 15 வயதில் நான் நடிகையாக வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை.

ஆனால் அது நடந்தது அதுபோல் எனக்கு திருமணம் சரியான நேரத்தில் நடக்கும். நானும் எனது தாயும் எப்போது என்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்போது திருமணம் செய்து கொள்வேன்.

என்னிடம் தற்போது 10 படங்கள் கைவசம் உள்ளன. என் படங்களுக்கு நானே போட்டியாக இருக்கிறேன் என்றும் ஹன்சிகா தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவபூசை என்ற பெயரில், மூன்று பெண்கள் மீது வல்லுறவு
Next post 14வயது சிறுமி கடத்தல்: இளைஞன் தாய் பொலிசாரால் கைது