சிவபூசை என்ற பெயரில், மூன்று பெண்கள் மீது வல்லுறவு

Read Time:2 Minute, 45 Second

manthira.Samiyarசிவ பூசை செய்வதாகக்கூறி மூன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை தம்பகல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவனின் நோயைக் குணப்படுத்துமாறு அவரின் மனைவி மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடினார். மந்திரவாதியும் நோயாளியைக் குணப்படுத்துவதாகக் கூறி தம்பகல்லை என்ற இடத்தில் வீடொன்றிற்குள் பிரவேசித்தார்.

நோயாளியைக் குணமாக்கும் பூஜையை ஆரம்பிக்கும் முன் காணிக்கை செலுத்த வேண்டுமென்று கூறி நோயாளியின் மனைவியை அறைக்குள் அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளார்.

அத்துடன் மேலும் 15 வயது நிரம்பிய யுவதி மற்றும் கர்ப்பிணிப்பெண் ஆகிய இருவரையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். அதன் பின்னர் நோயாளியைக் குணமாக்கும் பூஜை ஆரம்பிக்கப்பட்டது.

அவ்வேளையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தம்பகல்லை பொலிஸ் நிலையத்தில் தமக்கேற்பட்ட நிலை குறித்து புகார் செய்துள்ளார்.

இப்புகாரையடுத்து விரைந்த பொலிஸார் நோயாளியைக் குணமாக்கும் பூஜையில் ஈடுபட்டிருந்த மந்திரவாதியைக் கைது செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இம்மந்திரவாதியினால் மூன்று பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

அத்துடன் இம்மந்திரவாதி காவி உடை தரித்தவராக இருந்த போதிலும் பண்டாரவளை தெஹியத்தகண்டிய கடுகண்ணாவை ஆகிய பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வந்தவரென்றும் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் இக்காவி உடை தரித்த மந்திரவாதியால் கையடக்கத் தொலைபேசியை பரிசீலனை செய்த பொலிஸார் அத்தொலைபேசியில் ஆபாசப்படங்கள் பல பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியின் நிர்வாண புகைப்படமெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்
Next post சிம்புவுடன் காதல் முறிவா? -ஹன்சிகா பதில்