EPDP கமலேந்திரனுக்கு, மார்ச் 6ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு

Read Time:1 Minute, 52 Second

epdp.kamal-06aநெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் வீட்டில் இருந்து சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

அதனையடுத்து வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ரெக்சியனின் மனைவி மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி லெனின்குமார் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி பிரதான சந்தேகநபரான கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற கிளி கம்பளையில் உரிமையாளர் வீட்டை சென்றடைந்தது
Next post மாணவியின் நிர்வாண புகைப்படமெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்