போலந்தில் 8 வயது மகனை கார் ஓட்ட செய்து விபத்து, குடிகார தந்தைக்கு 5 ஆண்டு சிறை

Read Time:1 Minute, 57 Second

arrest-001வார்சா: போலந்தில் உள்ள ஜெய்னியோ என்ற நகரைச் சேர்ந்தவர் மிகோலஜ் தாமஸ் செவ்ஸ்கி. சம்பவத்தன்று மிகோலஜ் தனது வீட்டின் அருகே உள்ள ‘பார்’ ஒன்றிற்கு குடிக்க சென்றுள்ளார்.

அங்கு நன்றாக மூக்கு முட்ட குடித்தார். போலந்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிப்பவர்கள் கார் ஓட்ட தடை உள்ளது.

எனவே போதையில் எவ்வாறு வீட்டிற்கு செல்வது என யோசித்த மிகோலஜ் தனது 8 வயது மகன் ஜூலியசை வீட்டில் இருந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் ஜூலியசுக்கு கார் ஓட்ட மிகோலஜ் பழக்கியிருந்தார். அங்கு வந்த ஜூலியசை காரில் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி மிரட்டினார்.

இதனையடுத்து காரில் மிகோலஜை வைத்துக் கொண்டு ஜூலியஸ் காரை ஓட்டினான்.

இதில் சாலையின் சிக்னல் பகுதிக்கு வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இதில் மிகோலஜ், ஜூலியஸ் ஆகிய இரண்டு பேரும் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து மிகோலஜ் கைது செய்யப்பட்டார். இதில் 8 வயது மகனை கார் ஓட்ட செய்த மிகோலஜ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தலைவராக எட்வர்ட் ஸ்னோடென் தேர்வு
Next post பிக்கு விளக்கமறியலில் வைப்பு