பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை -சம்பிக்க

Read Time:1 Minute, 13 Second

sampikkaபிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஜாதிக ஹெல உருமய பிரதமருக்கு எதிரான வழக்கு தொடரப் போவதாக கூறியது, இந்த தீர்மானத்தை மாற்றியுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரருக்கு, பிரதமரால் வெளியிடப்பட்ட கருத்தால் அவமரியாதை ஏற்பட்டதாகவும், இதனால் ஹெல உருமயவால் நஸ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாகவும் முன்னதாக கூறப்பட்டது.

எனினும் ஓமல்பே சோபித தேரருக்கு, ராமன்ய மகாநிக்கயா மகாநாயக்க தேரரால் வழங்கப்பட்ட அறிவுரையின் பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்நாட்டு கலைஞர்களை புறக்கணிப்பதா? அருங்காட்சியகத்தில் புகுந்து கலைநயமிக்க ஜாடியை உடைத்த ஓவியர்..
Next post மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி