ஜனநாயகம் பெயரளவில் தான் உள்ளது – ஜமசிட்டாவிடம் விக்னேஸ்வரன் விளக்கம்

Read Time:3 Minute, 47 Second

003aஜனநாயகம் இங்கு பெயரளவில் தான் இருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மேரி ஜமசிட்டா தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இக் குழுவினர் முன்னதாக காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன் பின்னர் 11 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தனர்.

இச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலார்களிடம் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

003bஅவர் மேலும் தெரிவித்ததாவது,

இச் சந்திப்பில் அரசியல் தொடர்பான விடயங்களே ஆராயப்பட்டது. அரசியல் ரீதியாக எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

முக்கியமாக இங்கு தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில் ஐனநாயகம் திரும்ப வந்திருக்கின்றமை உங்களுக்கு சந்தோசமளிக்கின்றதா என கேட்டார்.

அதற்கு நாம் இங்கு ஐனநாயகம் பெயரளவில் தான் வந்திருக்கின்றது 2009 , 2010, 2011 , 2012 தேர்தல் வைப்பதகாக கூறி இறுதியில் இந்தியாவின் அழுத்தம் காரணமாக 2013 இல் தான் தேர்தலை நடத்தியது.

மாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு பல விதங்களிலும் தற்போது முட்டுக் கட்டையாக இருப்பதால் இங்குள்ள பிரச்சினைகள் தேவைகளை சரிவரக் கவனித்துக் கொள்ள முடியாத நிலையிலையே நாங்கள் எங்களுடைய பணிகளை ஆற்றி வருகின்றோம் என்றோம்.

இதற்கு அவர் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்று கேட்டிருந்தார்.

எங்களுடைய மத்திய அரசாங்கம் தனது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது மாகாண சபைகளுக்கு உள்ள சில உரித்துக்கள் மற்றும் சட்டத்தின் பிரகாரம் அந்த அந்த உரித்துக்கள் அவர்களிடம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்றோம்.

அதற்கு அவர் தங்களால் செய்யக் கூடியது மிகவும் குறைவென்றும் ஆயினும் எங்களுடைய கருத்துக்களை அதிகாரத்திலுள்ளவர்களிடம் தெரியப்படுத்தி நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது தொடர்பாக தாம் ஆராய்வதாகவும் தங்களிடம் கூறியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய அரசின் பதில் தாமதமானால் தமிழகம் விடுவிக்கும்: ஜெயா
Next post பெக்கோ இயந்திரம் விழுந்து ஒன்பதுபேர் படுகாயம்