மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

Read Time:1 Minute, 18 Second

death_3யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழ்ந்ததில் நேற்று மாலை குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி கிழக்கு கைதடிப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காக வேப்ப மரத்தில் ஏறி வெட்டிக் கொண்டிருந்த போதே மரக்கிளை முறிந்து குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்துள்ளார்.

இதேவேளை கீழே நிலத்தில் கிடந்த கல்லில் தலைமோதுண்டதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை -சம்பிக்க
Next post கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தலைவராக எட்வர்ட் ஸ்னோடென் தேர்வு