கல்லால் தாக்கி, கள்ளக்காதல் ஜோடி ஒன்றிற்கு மரண தண்டனை

Read Time:1 Minute, 37 Second

love-bad-01பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் தவறான தொடர்பினை பேணிய குற்றத்திற்காக ஜோடி ஒன்றிற்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமான குறித்த இருவரும் தமது துணைகளுக்கு துரோகம் இளைத்து தவறான உறவை பேணி வந்ததனால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை உள்ளூர் மதகுரு ஒருவர் வழங்கியுள்ளார்.

இதேவேளை இந்த சட்டவிரோத மரண தண்டனை தொடர்பில் குறித்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனும், உயிரிழந்த ஆணின் தந்தை மற்றும் மாமா ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதேசத்தினை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இவ்வாறான மரண தண்டனைகள் மற்றும் ஏனைய தண்டனைகள் சட்டவிரோதமானவையாக இருக்கின்ற போதிலும் உள்ளுர் முதியவர்கள் மற்றும் மதத்தலைவர்களினால் இவ்வாறான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்குவினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்
Next post மாணவியை கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் குடும்பம் நடத்திய இளைஞர் கைது