புலியின் கூண்டிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சீன வாலிபர்

Read Time:2 Minute, 6 Second

tiger-01பெய்ஜிங்: மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட வாலிபர் ஒருவர் மிருகக் காட்சி சாலையில் உள்ள புலியின் கூண்டிற்குள் குதித்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் உள்ள செங்க்டு மிருக காட்சியகத்திற்குச் சென்ற யாங் ஜிங்காய் என்ற 27 வயது வாலிபர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த புலியின் கூண்டிற்குள் குதித்துள்ளார்.

வாலிபரின் இச்செயலால் அதிர்ச்சியடைந்த மற்ற பார்வையாளர்கள் அவரைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மிருகக் காட்சி சாலை பாதுகாவலர்கள் யாங்கை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு கூண்டுக்குள் குதித்த யாங், புலியை ஆத்திரமூட்டும் வகையில் அதன் தாடையை பிடித்து இழுத்து, சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து புலி அவரை தாக்கத் தொடங்கியுள்ளது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு மிருக காட்சி சாலைப் பாதுகாவலர்கள் யாங்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் யாங், மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இத்தகைய தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகன் கடத்தல்: EPDP அலுவலகத்தில் முறையிடச் சென்ற போது, கடத்த வந்தவர்கள் அதே உடையுடன் அங்கு நின்றனர்!!
Next post “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்” பொதுக்கூட்ட அறிவித்தல்!!