கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா?: டைரக்டர் பதில்

Read Time:2 Minute, 25 Second

Nayantharaவித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ இந்தி படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இதில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். நானே, பசுபதி, வைபவ், வினய்வர்மா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தியில் டைரக்டு செய்த சேகர் கம்முலாவே தமிழ் படத்தையும் இயக்குகிறார். வித்யாபாலன் போல் கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்ததாகவும் எனவே கதை மற்றும் கேரக்டரில் மாற்றம் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இது குறித்து டைரக்டர் சேகர் கம்முலாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்றும் கதையை மாற்றும் படியும் நயன்தாரா என்னை நிர்ப்பந்தித்ததாக வெளியான செய்திகள் வதந்திதான். வித்யாபாலன் இந்தியில் கர்ப்பிணியாக நடித்த கேரக்டரை தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நான்தான் மாற்றினேன்.

நயன்தாராவை அணுகி கதை சொன்ன போதே அவர் கர்ப்பிணியாக இல்லாமல் அமெரிக்காவில் இருந்து பழைய ஐதராபாத்துக்கு தனது கணவனை தேடி வரும் ஒரு பெண் கேரக்டர் என்று விவரித்தேன். பெண் வலிமையானவள் என்பதை காட்டுவதற்காகவே கதையை உருவாக்கினேன்.

இந்தி போல் இல்லாமல் கதையில், மாற்றங்கள் செய்துள்ளேன். நயன்தாரா பிரமாதமாக நடித்துள்ளார். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அவர் நடிப்புக்கு ஈடு இல்லை.

இவ்வாறு சேகர் கம்முலா கூறினார்.

தமிழ் பதிப்புக்கு மரகதமணி இசையமைத்துள்ளார். விஜய் சி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருந்தா சாரதி, மகேஷ் வசனம் எழுதியுள்ளனர். மதன்கார்க்கி பாடல் எழுதியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விசா மறுப்பு செய்தி பொய்; மீண்டும் ஜெனீவா செல்வேன்: அனந்தி
Next post மகன் கடத்தல்: EPDP அலுவலகத்தில் முறையிடச் சென்ற போது, கடத்த வந்தவர்கள் அதே உடையுடன் அங்கு நின்றனர்!!