வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி

Read Time:1 Minute, 30 Second

NorthPCவடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் கனடா நாட்டின் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு இவ் இணையதளம் சில காலமாக பணத்தினை சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த நடவடிக்கை தொடர்பாக வட மாகாண சபை எவ்வித ஒப்புதலோ அங்கீகாரமோ அளிக்கவில்லை என்பதையும் வட மாகாண சபையின் இலச்சினையை வேறு எவரும் உபயோகிப்பது முறையற்றது எனவும் குறிப்பிட்டார்

அத்துடன் இதனால் வட மாகாண சபை நிதி சேகரிப்பில் ஈடுபடுவது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றும் இது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து வட மாகாண சபையின் பேரையும், இலட்சினையை ஊடங்கங்களிலும், இணையதள விளம்பரங்களிலிருந்தும் நீக்கி விடுமாறு கேட்டுகொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்
Next post நான்காவது திருமணத்துக்கு மணக்கோலத்தில் நண்பர்கள் புடைசூழ வந்த நபர்